என் ஆராய்ச்சி
அண்டங்களை
பற்றியதும் அல்ல...
அணுக்களை
பற்றியதும் அல்ல....
உன் அங்கங்களின்
அணிவகுப்புகளை
அணுவணுவாய்
ஆராய்திடவே...
உன் கூந்தல்...
காற்றுக்கும் கவிபாட
கற்றுக் கொடுத்த
ஒரு கவிதை...
உன் விழிகள்...
என்னை பித்தனாக்கியதின்
பெரும்பங்கு உன்னுடையதே....
உன் இதழ்கள்...
நான் சுவைத்திட இயலா
ஒரு தேவாமிர்தம்...
நீ சிரித்து வைத்த
உன் கன்னக்குழி...
நான் புதைந்திட விரும்பும்
ஒரு புதைகுழி...
உன் கரங்கள்...
நான் பற்றிட நினைத்த
ஒரு நிறைவேறா வரம்...
உன் பாதங்கள்...
என் வீட்டுவாசல்கள்
புழங்கிட நினைத்த
ஒரு பொக்கிஷம்...
மொத்தத்தில்
நான் போற்றிடவே
பிரம்மனால் படைக்கப்பட்ட
அரிய படைப்பு நீ...!
No comments:
Post a Comment