வருவாயா என்னவளே??




இருண்ட வானில் ஒளிக்கீற்றாக...
இதய வீணையதனை இதமாக வருடி...
வாடிய பயிருக்கு வான் மழையாக...
நெஞ்மதில் நேசத்தை விளைத்தவனே!!!

நஞ்சை உண்டவளாக நான் தவித்த வேளை...
சஞ்ஜீவியாகி தாங்கியவன் நீயல்லவா??
நேசம்தனை நெஞ்சில் கொண்டோம்!!!
பாசம் நட்பாகி நாளொரு வண்ணம் வளர்ந்து...
தேசங்கள் தாண்டிய போதிலும் நேசமது நிறைந்த...
வாசம் வீசும் மலராக உன் ஆளுமை என்னுள்!!

எங்கு தொடங்கும் எப்படி முடிவது வாழ்க்கை மட்டுமா??
காதலும் அப்படியே...இதயத்தினை ஆளும் உணர்வது...
இளமையில் மட்டும் மலர்வதல்ல...
நெஞ்சம் கொண்ட நேசமது முதுமையிலும் மலர்ந்து..
மூச்சுள்ள வரையல்ல முக்தி வரை தொடரும்!!

என்றெல்லாம் எழுதிய கனிவான காலமது...
கானல் நீராகி கற்பனையில் மட்டுமே என்றானதால்...
என் இன்பக் கனவுகள் யாவும் எழுத மறந்த கவிதையானது!!!

No comments:

Post a Comment