
கண்ணால் எனைக்
கவர்ந்த காரிகையே...
கள்ளமில்லா அன்பால்
எனைக் கட்டிப் போனாய்!!
சிந்தனையாவும்
நீயாக சிந்தம் கலைந்து ...
பித்தம் கொண்ட
எனக்கு மருந்தானவளே..
நித்தம் உன் வருகைக்காக
ஏங்குகிறேன்!!
உடல் நோய்தனை மறக்கச்
செய்து..
உள நோய்தனை ஏன்
தந்தாய் என்னவளே??
தனிமையே என் வரமென
துவண்ட எனக்கு...
அன்பால் அணைப்பால்
தாயாகி தாங்கியவள் நீ...
தாயினை இழந்த சேயாக
என் தவிப்பை அறிவாயா நீ??
இருண்ட என் வாழ்வின்
விடி வெள்ளியே...
இன்னமும் என் மூச்சு
உன் வரவிற்காகவே!!
வேண்டாம்மடி இந்த
நரக வேதனை!!
வேணுமடி உன் தரிசனம்!!
No comments:
Post a Comment