காதல் அரும்பு




கேளாமல் கொடுப்பதும்
சொல்லாமல் வருவதும்
நினைவாலே ரசிப்பதும்
நினைத்தாலே இனிப்பதும்
தனியாக சிரிப்பதும்
தனிமையில் புலம்பலும்
உன் மை நினைப்பதும்
உண்மை மறப்பதும்
உலகை சுருக்குவதும்
உவகை பெருக்குவதும்
சிந்திக்காமல் சந்திப்பதும்
சந்தித்த பின் சிந்திப்பதும்
காதலின் மாயம்...

No comments:

Post a Comment