
காஞ்சியின் பட்டு உடுத்தி
வஞ்சி நீ வர..
உன்னில் அகதி போல்
தஞ்சமாகும் உவமைகள்..
வஞ்சி நீ வர..
உன்னில் அகதி போல்
தஞ்சமாகும் உவமைகள்..
விழிகள் அசையாது
மென்பார்வை நீ பார்க்க..
உன் கண்ணின் மையில்
வசியமாகும் வார்த்தைகள்..
மென்பார்வை நீ பார்க்க..
உன் கண்ணின் மையில்
வசியமாகும் வார்த்தைகள்..
உன் பார்வைகள் முடியும் இடத்திலே
இந்த கவிதைகள் தொடங்குகின்றன..
இந்த கவிதைகள் தொடங்குகின்றன..
உன்னை எழுதும் நேரம்
காகிதத்தில் உயிரும் மெய்யும்
ஓடி விளையாடும் தருணம்..
ஏனோ முற்றுப்புள்ளி மட்டும்
விளையாடா வருவதில்லை..
காகிதத்தில் உயிரும் மெய்யும்
ஓடி விளையாடும் தருணம்..
ஏனோ முற்றுப்புள்ளி மட்டும்
விளையாடா வருவதில்லை..
No comments:
Post a Comment