யார் இவளே


வெண்மேகங்களை முத்தமிட்டன
மலை முகடுகள்..
நீல வானின் அழகு நெஞ்சை
மெல்ல நனைத்தது..
பனி கரைந்து நீரோடை ஆனது..
நதியினில் சேர ஓடி வந்தது..
வான்,மேகம்,மலை..
தெளிந்த கண்ணாடி நீருக்குள்
படம் பிடிக்கபட்டன..
பூக்கள் பூத்து சிரித்தன..
இலைகள் தலை அசைந்தன..
காற்று வீசியது...
காதோரம் பேசியது..
இயற்கை மொத்தமும்
அவளை வரவேற்றன..
அவள் அங்கே காத்திருந்தாள்..
இயற்கையோடு இணைந்து இருந்தாள்..
மழை வருமுன்னே
வந்துவிட்ட கலாபமோ..
மழை வந்தபின்னே
தோன்றிவிட்ட வானவில்லோ..
மேகம் கலைந்து தவழ
சிந்திவிட்ட சாரலோ..
நீரில் இருந்து எழுந்து வந்த
தேவதையோ (Mermaid ) ..
யாரோ யார் இவள்
தெரியவில்லை..
எழுதவே நினைத்தேன்
மொழியில்லை..

No comments:

Post a Comment