கதிரவனின் காதலியே


கடல் மீது..வான் மீது..காற்றை கிழித்து
பறக்கும் அந்த வெப்ப காற்று பலூன்..
நினைவுகள் மீது..கனவுகள் மீது..
இதயம் கிழித்து பறக்கும்
உன்னை விடவா அதிசயம் ?
சூடான காற்றை தாங்கி..
தொடுவானம் தொடுகின்ற
அந்த வெப்ப காற்று பலூன்..
இதமான உன் தென்றல் பார்வைகள்
இதயத்தில் தொலை தூரம் பாய்வதை
அடிப்படையாக்கி கொண்டதோ ?
வண்ண வண்ண நிறங்களை ஏந்தி
விரைவாக எழும்போது..
வண்ண வண்ண பூக்கள் தன் முன்னே
பூத்து நின்றதை வியப்பாக பார்த்ததோ ?
சூடான காற்றுக்கும் வியர்த்ததோ ?
நீ தலை சாய்த்து..உனை சாய்த்து
நிற்கும் அழகினில்..பாரேன்..
அந்த இயற்கையின் நிழலும்
உன் பின்னே சாய்கிறதே..
உன் வானவில் ஆடையின் அழகினில்
அந்த இயற்கையும் வீழ்கிறதே..
இலையுதிர் காலத்தின்
மஞ்சள் சருகுகள்..🍂🍂
வசந்த காலம் நீ வந்ததால் 🌿🌿
உன் மீது தன்னை தூவி
மகிழ்ந்ததோ..
பச்சை வண்ண பூவே..
உன் மீது விழுந்தால்
சருகும் மீண்டும் துளிராகும்..
ஊதாப்பூக்கள் கண்ணுக்கு
புலப்படவே இல்லை..
இன்று தான் புரிந்தது..
உன் உகிரினில் ஊதாப்பூ சிறை..👌👌
(உகிர் = நகம் )
விழிகளின் மொழிகளை
சொல்லி சொல்லி கண்படுமோ..
ஆதலாலே..கண்கள் மறைத்தாள்..
விழிகளின் அழகினில்
கதிரின் வெயில் வசப்படுமோ..
ஆதலாலே..குளிர் கண்ணாடி அணிந்தாள்..
மொத்தமாய் முடிந்த
சிகையினில் அடரினில்
சிக்கி கொண்ட சூரியன்
மீண்டும் விண் செல்லவில்லை..
உன் இதழினை அளந்த
நானோமீட்டர் புன்னகை
இதயங்கள் அளக்க தவறவில்லை..
பொலிவான முகத்தினை உடைய
மெலிவான பெண் பூவே..
வெப்ப காற்று பலூனில் நீ சென்றாயா ?
சுமையில்லா சுகமாக உனை ஏற்றி
பறந்த அழகை கண்டு மகிழ்ந்தாயா ?

No comments:

Post a Comment