அனைத்தும் அதிசயமே


எலிசபெத் ராணிக்கு எழிலோவிய
விருது...

எல்லோர சிற்பத்துக்கு சட்டென
வந்தது உயிரு..

உலக அழகிகளுக்குள்
மூண்டது நான்காம் உலக போர்...

கண்ணதாசனுக்கு மொழி மறந்த
கொடுமை...

கம்பனின் கவிதைகள் தொலைந்தது
புதுமை...

சுரதாவின் வாக்கியங்கள்
மோட்சம் பெற்றிட...

புதுமை பித்தனுக்கும் பித்தம்
தலைக்கேறிட...

புதினத்தில் பழமை சேர்ந்த
நிகழ்வு...

காற்றின் வாசம் முதன்முறை
அறிகிறேன்..

தண்ணீரின் உருவம் முதன்முறை
அடைகிறேன்..

சூரியக்கதிர்களை காண தவம்
கிடக்கிறேன்..

முத்துக்களின் நாணத்தில்
மூர்ச்சையாகி போகிறேன்..

மூன்றாம் பிறைக்கு விழா வைத்திட
போராடி தோற்கிறேன்...

முழு நிலவுக்கு வெள்ளை மாளிகை
கட்டிட அனுமதி கேட்கிறேன்..

செம்புல நிலத்தில் நட்சத்திரம்
விளைந்திட்ட பெருமை...

மின்மினி கூட்டங்கள்
நகப்பூச்சில் ஒட்டிக்கொண்ட அதிசயம்!!

சிகையினில் ஒளிந்திருக்கும்
புராண கதைகள்..

சிங்காரி சிக்கனமின்றி
சிரித்திட ..
சிந்தையில் சில்மிசங்கள்
நிகழ்ந்திட..

தமிழ் கடல் கடந்து செழித்திட
கவிதை உனக்கென வளர்ந்திடுதே
தினம் தினம்...

உன் பார்த்து பார்த்து உருகுதே
மனம் மனம்!!!

பிரியா உன்னை பார்த்து பார்த்து
கழிந்ததே என் பொழுதின்
கணம் கணம்!!!

No comments:

Post a Comment