அவளில் சிரிப்பின் சிறையில் நான்



மின்னுவதெல்லாம் பொன்னல்ல
இவள் மின்னல் சிரிப்புக்கு
முன்னால்..
பொன்னும் பெரிதல்ல!!!
#கார்மேகம்
உன் கேசத்தில் உயிர்த்தது
கார்மேகச்சுவடுகள்..
அது தத்தி தத்தி தவழ்ந்து உன்னை
வந்து சரணடைந்ததோ??
#கருப்புவைரம்
மண்ணுக்குள் புதைந்த கருப்பு வைரத்தினை...
இன்று இந்த பாவைக்கு உடையென
போர்த்தியது யாரோ??
#கார்பட்
ஒன்பது கோள்களில் ஒன்றிரண்டு
மாயமாம்...
இவள் சின்ன காதுக்கு அதை
அணிவித்ததால் தானோ??
#கிரானைட்
செதுக்கிய புருவத்தின்
கதை என்ன??
ஆங்கே கிரானைட்டின் துகளில்
பாய்விரித்தது யாரோ??
#மேக்னட்
கருவிழி இரண்டும்
காந்தத்தின் உருவோ...
இது புவியீர்ப்பு விசையன்றோ
விழியீர்ப்பு விசை..
இனி இதுவே நம் திசை!!
#அமாவாசை
இருள் சூழும் வானுக்கு!!!
இன்று கண் திருஷ்டி
பொட்டிட்டாரோ??
ஆகையால் உன் பிறை நெற்றி
நடுவே ஒட்டிட்டாரோ!!
#நிலா
கஜாப்புயலோ மாய்ந்து
போனதே..
எதற்கு அஞ்சி உன் மேற்காதோரம்
தஞ்சமானது இந்த வெண்ணிலா??
#பஞ்சுமெத்தை
பஞ்சுமெத்தை கன்னங்கள்
இனி பாற்கடலில் பிரம்மனுக்கும்
உன் கன்னங்களை பஞ்சனை!!!
#குறிஞ்சுப்பூ
உன் கூர்நாசியின் அழகே தனி
அதை சொல்ல வந்த
குறிஞ்சி மலருக்கு இல்லை
மொழி
#கோவைக்கனி
இதழா இரண்டும் இல்லை
கிளிகள்
கொத்தி திண்ணும்
கோவை கனியா??
#செவ்வானம்
உன் தோழோரம்
செவ்வானத்தை அள்ளி எடுத்து
துப்பட்டாவாக பரிசளித்தவர்
யாரோ??
அதில் விடியல் மறந்த
கதை கேளாயோ??
#நெற்கதிர்
மொத்ததில் நீ வளர்ந்து
செழித்த நெற்கதிர்..
இனி வேறெங்கு தேட
சொற்றொடர்!!!!

No comments:

Post a Comment