
பகல் மாறி இரவாகலாம்...
இரவு மாறி விடியல் தோன்றலாம்...
இலைகள் உதிர்ந்து பின் வசந்தமாகலாம்...
ஏன் இந்த உயிர் பிரிந்து உடலும் ..
உடலமாகலாம்!!
மாற்றம் ஒன்றே மாறாதது !!
மாறும் இவ்வுலகில் மாறாதது ...
நான் உன்மேல் கொண்ட அன்பு...!!
உன் உள்ளங் கண்டு...
என்னைக் கொடுத்தேன் !!
உன் உடலில் தளர்வும்...
உழைப்பில் குறைவும் கண்டு...
என் அன்பு அரவணைப்பு பாசம்..
நேசம் மாறாது!!
ஒரு வாய் கஞ்சியினை..
இரண்டாகப் பிரித்துண்டு...
என் மூச்சாக நீயும் ..
உன் இதயமாக நானும்..
வாழும் வாழ்வில் ...
என்றுமே மாறாதது
நம் காதல்தான் அன்பே!!
No comments:
Post a Comment