
பௌர்ணமியின் ரகசியம்
உன் இதழோரம் கசியும் அதிசயம்..
நுனி நாசி சிரிப்பில்
உடைந்து நொறுங்கும் இதயங்கள்..
உன் தொட்டாசிணுங்கி விழிகள் பார்த்து
கனவுக்குள் மீண்டும் தன்னை
மூடிக்கொள்ளும் விடியல்கள்..
உன் விழிச்சாரலில் நனைந்து
கவிதைக்கு காய்ச்சல் வராதிருக்க
கொடை பிடிக்கும் ஜிமிக்கி..
அழகி நீ..அழகின் அளவுகோல் நீ..
ப்ரியா நீ..என் கவிதைகளின் ப்ரியம் நீ..
என்றென்றும் உன் ரசிகை,
No comments:
Post a Comment