வானவில் சாயம் போகுமா ?


மழைச்சாரலில் நனையும் வானவில்லின்
சாயங்கள் போவதில்லை..
உன் விழிச்சாரலில் நனையும் இதயங்களின்
நேசங்கள் காய்வதில்லை...

இந்த மில்லிமீட்டர் சிரிப்பினில் தான்
மில்லியன் மனங்களை
உன் வசமாக்கி கொள்கிறாய்..

இந்த மௌனமொழி பார்வையில் தான்
நினைவுகளின் சத்தங்களை
உறைய வைத்து செல்கிறாய்..

நீ இப்படி சிரிக்கும் போது
காகிதங்களுக்கு கிறுக்கு பிடிக்கிறது..
நீ இப்படி பார்க்கும் போது
பிரபஞ்ச அழகின் செருக்கு மறைகிறது..

மழை வரும்முன்னே கூடும் மேகம் போல்..
உன் மீது அடர்ந்து படர்ந்து கிடக்கும்
கூந்தல் அழகா ?

சுட்டெரிக்கும் மஞ்சள் சூரியனின்
சிவப்பு அனலை..ஆடையாக உடுத்தி கொண்ட
உன் தோற்றம் அழகா ?

அவசரமாக பூசிக்கொண்ட உன் கண்ணின் மை..
புருவத்தின் நடுவே பூத்து விட்ட சிறு பொட்டு..
மெல்ல நெஞ்சம் ஊடுருவும் உன் சிரிக்கும் விழி..
இதழோரத்தில் கொட்டிக்கிடக்கும் பவள நிறம்..
காதோரம் கதகளி ஆடும் ஜிமிக்கி..
மணிக்கட்டில் அமர்ந்து விட்ட கடிகாரம்..

பார்த்து பார்த்து அலங்கரித்து கொள்கிறாய்..
உன் கொஞ்சும் அழகால் நெஞ்சம் வெல்கிறாய்

உன்னை பார்க்கும் போதெல்லாம்
எங்கோ பார்த்த முகம்..
எங்கோ பழகிய முகம்..
என்றே இதயம் சொல்கிறது..
உன்னை பார்த்துவிடவே..
உன்னிடம் பேசிவிடவே..
இறக்கை முளைத்து
மைல் தாண்டி பறக்கின்றன
இந்த கனவுக்காகிதங்கள்...

No comments:

Post a Comment