எழுத்தாணிகள் எல்லாம்
நீ நான் என முந்தி
கொள்ள...
உன்னை பற்றிய சிந்தனையில்
நான்...
வழுக்கி வழுக்கி விழும் என்
தமிழ் கூட
தடுமாறி போக...
வார்த்தைகள் கோர்த்திட
காலதாமதம்..
மெழுகு சிலை போல்
உன்னை அலங்கரித்து
மெட்டு போட்டிட ஆசை...
செவ்வானத்தூரலோடு நீ
ஏனோ என் கவியையும்
கட்டு போடுகிறாய்...
மலை மேகங்களோடு
மரக்கிளையும் ஊஞ்சல்
கட்டி காத்து நிற்கிறது...
நீயோ எம் மனதோர சிம்மாசன
திருடி...
பத்திரம் போடவில்லை பட்டாவும்
தேவையில்லை..
ஒய்யாரமாய் நீ வந்து ஒட்டி கொண்டாய்
பிசின் போல...

No comments:
Post a Comment