அவள் ஒரு கவிதை




வானில் சிறகு விரிக்கும் பறவை நானானால்

உன் வீட்டு முற்றத்து மரத்தில் கூடுகட்டலாம்
தினம் தினம் என்னவளின் பொன்முகம் காண
அனால் மனிதனாய் பிறந்துவிட்டேன் பெண்ணே
அதனால் உன் இதயத்தில் குடியேற ஆசைப்படுகின்றேன்

என் காதலை முழுமையாக சொல்ல ஆசையடி
வார்த்தையாக சொல்ல சொற்கள் இல்லை என்னிடம்
காதலை வர்ணிக்க உலகில் வார்த்தைகளும் இல்லை
என் இனிய பூந்தென்றலே உன் தோள்சாய ஆசையடி
பிரசவிக்க முடியாத கர்ப்பமாய் என் மனதில் நீ இருக்க
கண்மணியே காலமெல்லாம் உன்னை சுமக்க ஆசையடி

இரவினில் உன் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டாட வேண்டும்
காலையில் உன் கரும் கூந்தல் மேகத்தில் கண்விழிக்க வேண்டும்
சொல்லிவைத்த சில ஆசைகள் சொல்லாமல் பல ஆசைகள்
அத்தனையும் சொல்லவேண்டு கவியால் இல்லை பெண்ணே
சொல்வேன் கவியால் இல்லை என் வாழ்க்கை காவியத்தால்.....

No comments:

Post a Comment