உன்னில் என்னைத் தேடி
கண்களால் உட்புகுந்தாய்
நாளும் உன் அருகாமையை
உணரவைத்தாய்
நினைவில் பதிந்த உன்
பிம்பங்களால்
சூழ்ந்துகொண்டாய்
சுவாசக்காற்றிலும் உன்
காதலை கலந்து அனுப்பினாய்
உன்னை மறக்கும் நிமிடங்கள்
நானும் தொலைகிறேன்
உன்னைத்தேடி
உன் வருகைக்காய் காத்திருக்கும்
நேரம் உன் நினைவுகளும்
வந்து வந்து செல்கிறது
நீ எப்போது வருவாய் என்று
தெரியவில்லை எனக்கு
ஆனால், உன் நினைவுகளோ
எப்போதுமே வந்து
செல்கிறது
No comments:
Post a Comment