
ஒடுவது நீ என்றால் உன்னை
துரத்திக் கொண்டே இருப்பேன்..... 🌹
அழுவது உன் கண்கள் என்றால்
கண்ணீராய் நான் விழுவேன்...... 🌹
நடப்பது உன் பாதம் என்றால்
தரை விாிப்பாய் நான் இருப்பேன்..... 🌹
உறங்குவதற்கு நீ சென்றால்
குளிா் நிலவாய் தாலாட்டுவேன்.... 🌹
விழிக்க நீ தயரானால் அந்த
விடியலாய் நான் வருகிறேன்...... 🌹
நீ பயணிக்கும் ஓவ்வொரு நிமிடமும்
பயணமாய் நான் இருப்பேன்...... 🌹
நீ சுவாசிக்கும் ஓவ்வொரு வாியிலும்
வார்த்தையாய் நான் இருப்பேன்..... 🌹
நீ உடுத்தும் ஆடையில் ௯ட
வண்ணமாய் நான் இருப்பேன்......🌹
வாழ்வதற்கு நீ விரும்பினால் உன்
வாழ்க்கையாய் நான் இருப்பேன்.... 🌹
என்றும் உன்னுடன்....
No comments:
Post a Comment