
ஒரு முழுமதியினை முதன்முறை
பார்க்கிறேன்..
அவள் விழிப்பார்வையிலே முதன்முறை பூக்கிறேன்!!!
ஒரு வானிவில்லை சிறை எடுத்த
சிரிப்பினை பார்க்கிறேன்..
அதை அனு அனுவாய் ரசிக்கிறேன்!!!
தெள்ள தெளிவான அவள் பார்வை(Clear vision) காந்த துகள்களால் ஆனது...
அது இழுத்து பிடித்து நம்மை
ஆட்சி செய்கிறது...
நூலிலை குழல் அது வளைந்து
நெளிந்து வர்ணங்கள்(Hair coloring) அணிந்து
பிரதிலிக்கிறது!!!
மஞ்சள் கிழங்கினை அரைத்து குழைத்து ஆடையாக அணிந்து வந்தாளோ???
சந்தனக்காட்டை கோர்த்து புன்னகை பூவினை எடுத்து
வந்தாளோ???
வரிக்குதிரை தோலினை கால்களுக்கு போர்த்தி கொண்டாளோ???
இதற்காகவே அவள் காடு மலை மேடெல்லாம் சுற்றி வந்தாளோ???
அவள் மெல்லிய பார்வையை வீசி
போகையில் ரோஜா கூட்டங்களின்
ஏக்கத்தை என்னவென்று நான் சொல்லேன்???
அவள் கூரிய நாசி பனிமலை சருக்கு உருகிட்ட போதும்
அசையா நின்ற அழகிய கோபுரம்!!!
அவள் மஞ்சள் முகத்தழகி
வஞ்சனையில்லா சிரிப்பிழகி
கொஞ்சும் விழியழகி
பார்க்க பார்க்க பரவசப்படும்
மனமே...
சிளிர்த்து!!! தமிழை சிறை எடுத்து
மாலை கோர்த்து அணியில்லா
இவளுக்கு மாலையாக்கிடு!!!
No comments:
Post a Comment