தந்தையர் தின வாழ்த்துக்கள் ..



அப்பா என்பது வெறும் சொல் அல்ல..
அது கண்முன்னே வாழும் கடவுள் ..
கடவுளுடன் ஒப்பிடுவதில் எனக்கு விருப்பமில்லை ..
ஏனென்றால்
எந்த அப்பாவும் தான் பிள்ளை கஷடப்படுவதை
பார்த்து ரசிப்பதில்லை ..
அப்பா கடவுளுக்கும் மேலானவர்கள் ..

அம்மா கூட தான் பிள்ளையை
இடுப்பில் தான்  தூக்கிவைத்துக்கொள்வாள்..
ஆனால் அப்பா மட்டும் தான்
தோள் மேல் தூக்கிவைத்துக்கொள்வர் .
காரணம் தான் பார்க்கததை கூட
தான் பிள்ளை பார்க்கவேண்டும் என்பதற்க்காக ..

அப்பாக்கள் ஏணி போல  ..
நாம் வாழ்க்கையில் மேல போக .
அவர்களின் வலி பொறுத்துக்கொண்டு
நமக்காக வாழ்வார்கள் .....
ஏறும் போது தெரியாது அதன் வலி
நாளை நீ சுமக்கும் போது தான் தெரியும் ...
தந்தையர் தின வாழ்த்துக்கள் ...

No comments:

Post a Comment