மோதல் கொஞ்சம்
காதல் கொஞ்சம்..
கண்ணீர் கொஞ்சம்
புன்னகை கொஞ்சம்..
தொலைவினில் கொஞ்சம்
அருகினில் கொஞ்சம்..
உனது விழிகளின் தாக்கத்தில் கொஞ்சம்..
நீ இல்லை என்ற
ஏக்கத்தில் கொஞ்சம்..
ஊடல் கொஞ்சம்
தேடல் கொஞ்சம்..
இவ்வாறே கொஞ்சம் கொஞ்சமாய்
நான் என்பது கொஞ்சமும் மிச்சமின்றி
நீயாகிப் போனாயடி என்னில்....
No comments:
Post a Comment