தமிழ்மொழி மறந்தேன்


இரவில் குளிரும் ஓர் மார்கழி
நிலா...
அவள் ஊருக்குள் வந்தால் அரங்கேறும்
திருவிழா..

நெற்றி பாய்விரிப்பில்
நிந்தம் நாம் துயில் கொள்ள..

மல்லிக்குழலில் ஊஞ்சல் ஒன்றை
மனம் கோர்க்க..

காற்றில் ஆடுதே மனம்
இங்கும் அங்குமாய்...

பிறைநெற்றிக்கு செந்தாழ் பொட்டிட்டு
மாவிழிக்கு வண்ணமிட்டாய்
ரோஜா இதழ் தொட்டு..

கன்னக்குழி நோக்கி என்
தூரிகை தோட்டக்கள் படையெடுக்க..

பஞ்சுமெத்தை என எண்ணி
அங்கேயே பாய்விரிக்க...

அசத்தும் கோபுரநாசியில்
ஆயிரம் கவிதைகளை நீ மறைக்க..
அதை எட்டி பிடிக்க எண்ணி
பீனீக்ஸ் பறவையாய் நான் உருவெடுக்க...

வெட்டு எடுத்த ப்ளெம்ஸ் பழச்சுழை
உன் இதழ்...
மூன்று வரி கோடிட்டு தடை விதித்தாய்
அது எல்லை கோடு...

யாருக்கும் எட்டாத கோடு!!!

ஜிமிக்கி தோடு உன் காதோடு
நின்றாட..
என் தமிழும் கொஞ்சம் தன்னை
மறந்த கதை கேளாயோ???

பிரியா நீ நித்தமும்
தமிழ் சொல் எடுத்த உன்னுருவில்
கதை கூறாயோ!!!

No comments:

Post a Comment