
என்ன ஒரு சந்தோசம்
இந்த பிரிவுக்கு ..
நம்மை பிரித்ததில் ...
அதற்க்கு எப்படி தெரியும் ..
இப்போது தான் அதிகம்
நாம் காதலிக்கிறோம் என்று ..
ஒன்றாக இருந்த போது
ஓராயிரம் முறை பேசிக்கொண்டோம்
இப்போது
ஓராயிரம் முறை நினைத்துகொள்கிறோம்..
பேசிக்கொண்டு இருப்பதை விட
நினைத்து கொண்டு வாழ்வதும்
ஒரு சுகமே...
No comments:
Post a Comment