
எங்கே நீ..எங்கே நீ..
தேடி தேடி அலைந்தேன்..
கடல் தொடும் செவ்வானமாய்
எட்டா தூரத்தில் நீ..
பார்க்க நினைத்தால் மின்னலாகிறாய்..
வெட்டி வெட்டி நெஞ்சில் அறைகிறாய்..
எங்கே நீ..எங்கே நீ..
தேடி தேடி அலைந்தேன்..
கரை தொட்டு நொடியில் மறையும்
வெண்ணிற அலை நீ..
பிடிக்க நினைத்தால் காற்றாகிறாய்..
நீந்தி நீந்தி நினைவிற்க்குள் மூழ்குகிறாய்..
No comments:
Post a Comment