அவள் ஒரு அதிசயம்



உன் அழகினை எழுத..
கற்பனைகள் தேடி தேடி..
தேசங்கள் செல்லும்..
என் காகிதங்கள் எல்லாம்
கொலம்பஸாக மாறும்
அதிசயம் நீ அறிவாயோ..

உன் சிரிப்பிற்கு நிகரான
எதிர் வினை இல்லை..
உன் பார்வைக்கு நிகரான
எதிர் வினை இல்லை..
உன் தோற்றத்திற்கு நிகர் ஏது ?
உன் அழகினால்
உடைத்து எறியப்படும்
நியூட்டனின் மூன்றாம் விதி..

No comments:

Post a Comment