கவிதை
என்னையே எனக்கு அறிமுகம் செய்து வைத்த அவளுக்கு ஒரு கவிதை.. காதல் காயம்,பாசம் ,அன்பு அனைத்து தொகுப்புகளில் ஒன்றாக என் கவிதை
முயற்சி
முயற்சியின் பாதைகள்
கடினமானவை
ஆனால் முடிவுகள்
இனிமையானவை
தொடர்ந்து முயலுங்கள்
கனவுகள் நனவாகும்.....
கண்ணீர்.!
நான் கொடுத்த முதல் பரிசு உனக்கு ஞாபகம் இருக்க?
இல்லை என்று தெரியாது.
ஆனால்
நீ கொடுத்த பரிசு உன்னை நினைக்கும் போது எல்லாம்
கண்ணில் வருகிறது.
ஆம் நீ கொடுத்த கண்ணீர்.!
தெரியவில்லை
எனக்கு தெரியும்
நீ எனக்கு இல்லை என்று.
தெரிந்தும் நான் ஏன்
உன்னை காதலித்தேன்
என்று தான் தெரியவில்லை..
என் காதல்
நீ என்னை காதலிக்க கூட வேண்டாம்.
நீ என்னோடு இருந்தால் போதும் பெண்ணே!
உனக்கும் சேர்த்து நானே காதலித்து கொள்கிறேன்..
புரிதல்
எந்த ஒரு விஷயத்தையும்
நம் பக்கமிருந்து மட்டும்
பார்க்காமல்..., அடுத்தவர்
நிலையில் இருந்தும்
பார்க்கும் போது தான்
புரிதல் சாத்தியமாகும்....
ஒருமுறை யோசி
புது பொம்மையை பார்த்தவுடன்
பழைய பொம்மையை தூக்கி எறிந்து விட்டு
ஓடும் சிறு பிள்ளை போல
புது உறவு கிடைத்த பிறகு
பழைய உறவு எல்லாம் தேவையில்லாத குப்பையை மாறிவிடுகிறது...
நீ தூக்கி ஏறிய நான் ஒன்னும் உயிரெல்லா பொம்மை அல்ல பெண்ணே ..
உயிருள்ள சடலம்
உதறி விட்டு செல் முன் ஒருமுறை யோசி...
வலி
நான் மௌனமாக இருக்க நினைத்த போதெல்லாம்
என்னை பேச வைத்தாய்
நான் பேசவேண்டும் என்று நினைக்கும் போதோ
என்னை மௌனமாக்கிவிட்டு சென்றுவிட்டாய் !!!
அன்பு
அழுதுகொண்டு வாழ்வார்களும்
அழவச்சுட்டு வாழ்வார்களும்
பெரிய வித்தியாசம் இல்லை
இருவருமே அதிகமாக அன்பு வைத்தவர்கள் தான்..
Subscribe to:
Posts (Atom)