அழகோவியம்



ஒரு நட்சத்திர நடுக்கம் இவள் கண்ணிலே தெரிக்க...
ஒரு மேகத்தின் தொடக்கம் இவள்
கூந்தலில் தொடங்க..

ஒரு மெல்லின மாற்றம் இடையிலே
நடக்க...
வல்லினம் தோற்றதோ???

இவள் பார்வை சொல்லும் காதல்
பாதை மாறி போகுதோ???
அதில் பாதி இதயம் சாயுதோ???

ஒரு நூறு அழகிகள் கூட
நீ மட்டுமே எனக்கு புலப்பட
கண்ணில் காட்சி பிழையோ???

இந்த அழகு பதுமைக்குள்
மைக்ரோ நுண்ணனுக்கள் புகுந்ததோ???

அழகின அகராதி ஒன்று அம்சமாய்
நிகந்ததோ???

பாதி இதயம் பாரில் இல்லை
மீதி இதயம் என்னில் இல்லை
உன்னை தேடி உனக்குள்ளே ஒளிந்து கொண்டதோ???

சங்ககவிகள் இங்கே இல்லை
சாஸ்திரங்கள் புதிதாய் தொல்லை
இலக்கணம் மாற வழியும் இல்லை
நிகழ்ந்தது தான் என்ன??

ஒரு ஓவியம் மெல்லமாய் சிணுங்க
ஓவியன் கையோ நடுங்க
விந்தைகளை கச்சிதமாய் காட்டி
கொடுப்பவள் நீ!!!

உன் விழிகளுக்கு தூது விட்டு
தூது விட்டு களைத்து போன
என் தூரிகை...
இன்று வெற்றி பெற்றது!!!

நீ கொண்ட காதலை விழிகள் கொட்டி
தீர்த்தது!!!

நச்சென்ற நங்கூர சிரிப்பு
அதில் பட்டென்று பத்திக்கிச்சு நெருப்பு!!!

சுருக்கென்று பட்டுவிட்ட பார்வை
அதில் சட்டென திறந்த இதயக்கதவு!!

உள்ளே யாரு நம்ம
பிரியமான ஆளு!!!

அழகோவியம் நான் என்ன சொல்ல???
வார்த்தையே வர்ல😍😍😍 அம்புட்டு அழகு??

No comments:

Post a Comment