தேவதையே உன்னை சரணடைத்தேன்



சூரியனும் சந்திரனும்
உன்னை பார்க்க சண்டை
போட்டுக் கொண்டு இரவுபகல்
என இரு பொழுதுகளாய்
பிரித்துக் கொண்டு உன்னை
பார்த்து ரசித்தன
எண்ண முடியாத விண்மீன்ளும்
உன் உடல் அழகை எண்ணி
உடல் இழைத்ன
இன்றியமையா தென்றலும்
உன் சிரிப்பு அழகில் மயங்கி
உன்னையே சுற்றி வந்தன
இவையெல்லாம் மேலிருந்து
பார்த்துக் கொண்டிருந்த மேகமோ
தானும் உன்னை அருகில் பார்க்க
வேண்டும் என்ற ஆசையில் கடவுளிடம்
வரம் வாங்கி மழையாய் மாறி
பூமியை வந்து உன் தலை முதல் பாதம் வரை
தொட்டுச்சென்று தன்னை புனிதமாக்கி கொண்டன
முகம் காட்டாத மொட்டுகளும் உன்
முகம் பார்க்க இதழ் விரித்து உன்
அழகில் மயங்கி வாடி போயின...

No comments:

Post a Comment