மழைத்துளி



மழையின் வாசம் நீயோ ?
சுவாசித்ததும் கவிதை தூறல்கள்..
உன் சிரிப்பினை பார்த்துவிட்டால்..
நெஞ்சோரம் நயாகராவின் சாரல்கள்..
இந்த பூமி தாள்களில்..
கிறுக்க நினைக்கும் வானிற்கு..
உனது சிரிப்பு துளிகளே
மழைத்துளி..
அழகு உன்னை மட்டுமே..
அள்ளி கொள்வதேன் ?
கனிவு உன்னிடம் மட்டுமே
தஞ்சம் கொள்தேன் ?
அன்பு உன்னை மட்டுமே
பற்றி கொள்வதேன் ?
பிரபஞ்சத்தின் அழகெல்லாம்
உன்னிடம் அரியாசனம் போட்டது..
எங்கும் போக மறுத்து
உன் விழியினில் உன் இதழினில்
அடிமை சாசனம் மீட்டுது..
உன் விழிமீன் வலை..
சிக்கிடும் நெஞ்சங்கள்..
உன் சிரிப்பெனும் அலை..
இழுக்கப்படும் இதயங்கள்..
உன் அழகெனும் சிறை..
ஆயுட்கைதி உள்ளங்கள்..
உன் கொஞ்சும் சிரிப்பை
கைது செய்யவே..
அந்த காற்றும் கெஞ்சும்..
உன்னை பற்றி எழுதிடவே
உலகின் உவமைகளை
இந்த கவிதைகள் மிஞ்சும்..
இந்த பூமி தாள்களில்..
கிறுக்க நினைக்கும் வானிற்கு..
உனது சிரிப்பு துளிகளே
மழைத்துளி..

No comments:

Post a Comment